
தமிழகத்தில் நாளை வங்கிகள் அனைத்திற்கும் பொது விடுமுறை தினமாகும். அதாவது நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுவதால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை.
இதன் காரணமாக நாளை வங்கிகள் செயல்படாது. எனவே வங்கி தொடர்பான பணிகள் ஏதேனும் இருப்பின் வாடிக்கையாளர்கள் இன்று வங்கிகளுக்கு சொல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் நாளை ஏடிஎம் மற்றும் ஆன்லைன் வங்கி சேவைகள் போன்றவற்றில் எந்தவித பாதிப்பும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.