
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கப்படுகிறது. அதாவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதிகளில் வீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் நடபாண்டில் 68569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 209 கோடி முதல் தவணையாக விடுவிக்கப்பட்டதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு 125 கோடியாகவும் மாநில அரசின் பங்கு 83 கோடி ஆகவும் இருக்கிறது. ஒரு வீட்டுக்கு 1.20 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 60 சதவீதமும் மாநில அரசுகள் 40% நிதி ஒதுக்கீடு செய்கிறது.