
தமிழகத்தில் இன்று அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பொது விடுமுறை. இந்நிலையில் வழக்கமாக காந்தி ஜெயந்தி பண்டிகையில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் அனைத்து கிராமங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை நம்ம கிராம செயலி என்ற செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவித்தப்பட்டுள்ளது. மேலும் கிராமசபை கூட்டத்தின் போது வீடுகள் தோறும் தண்ணீர் குழாய் இணைப்பு வழங்குவது, பொது நிதி செலவினம் போன்றவைகள் குறைத்து விவாதிக்குமாறு ஊராட்சி சபைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு பொதுமக்கள் கிராம சபை கூட்டங்களில் தங்களுக்கு இருக்கும் குறைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம்.