
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பயன் பெறுகிறார்கள். இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு இந்த மாதம் 7 நாட்கள் வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை தினங்களை முன்கூட்டியே கணக்கில் கொண்டு வாடிக்கையாளர்கள் ரேஷனில் பொருட்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதன்படி மாதந்தோறும் முதல் 2 வெள்ளிக்கிழமை, 2-வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை.
அதன்படி இந்த மாதமும் அன்றைய தினங்களில் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு கூடுதலாக ஒருநாள் விடுமுறை. இதைத்தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு ஏதுவாக ஜனவரி 10-ம் தேதி ரேஷன் கடைகள் வேலைநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதன் காரணமாக பிப்ரவரி 22-ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 7 நாட்கள் விடுமுறை என்பது வழங்கப்பட்டுள்ளது.