மத்திய அரசு ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது பொது வைபை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. அதாவது இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்து வட்ட நிலையில் பெரிய கடைகள் முதல் சிறிய வணிக வியாபாரிகள் வரை ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள்.

இது பொதுமக்களுக்கு மிகவும் எளிதாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் பொது இடங்களில் அதாவது விமான நிலையங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொது வைபை சேவைகள் வழங்கப்படுகிறது. ஆனால் இது உங்களின் தனிப்பட்ட மற்றும் நிதி சேவைகளுக்கு ஆபத்தாக இருக்கலாம். இதன் காரணமாக பொது வைபை வசதியை பயன்படுத்தி ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை செய்யக்கூடாது.

இதனை பயன்படுத்தி ஹேக்கர்கள் எளிதாக மோசடி செய்வார்கள். இதுபோன்று பொது இடங்களில் வைஃபை சேவையை பயன்படுத்தி ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் மற்றும் தனிப்பட்ட விவரங்களை பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் இது மோசடிகளில் இருந்து தற்காலத்துக் கொள்ளும் வழிமுறை என்று மத்திய அரசாங்கம் கூறியுள்ளது.