
பொதுவாக மக்கள் தங்களுடைய சேமித்த பணத்தை முதலீடு செய்வதற்கோ தங்கம் வாங்குவதையோ முதலில் தேர்வு செய்கிறார்கள். அவ்வாறு முதலீடு செய்வதற்கு தங்க முதலீட்டு திட்டம் ஒரு சிறந்த திட்டம் ஆகும். ஆனால் மத்திய அரசின் சார்பாக வழங்கப்படும் இந்த முதலீட்டு திட்டம் குறித்த புரிதல் இல்லாதவர்களுக்கு இது ஒரு முக்கியமான பதிவு. அதாவது இந்த திட்டம் இந்திய ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்டது. இது நேரடியாக தங்க நகைகள் வாங்குவதை குறைத்து பத்திரம் வைத்து நகை வாங்குவதன் மூலமாக நாட்டில் தங்கத்தின் இறக்குமதி செலவு குறையும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது.
மேலும் முதலீட்டாளர்கள் தங்க பத்திரம் சேமிப்பு திட்டத்தில் பத்திரத்தை பெற்று வங்கி, போஸ்ட் ஆபீஸ், பங்குச்சந்தை மூலமாகவும் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ஒரு கிராம் மற்றும் அதிகபட்ச முதலீடாக நான்கு கிலோ கிராம் வரை தங்கத்தை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு அரையாண்டுக்கும் 2.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. சந்தையில் விற்கப்படும் தங்கத்தின் விலையை விட 50 ரூபாய் குறைவாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள் பக்கத்தில் உள்ள வங்கிகளுக்கு சென்று முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.