
நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்படும் நிலையில் தினசரி அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வங்கிகளுக்கு செல்கிறார்கள். அதில் விடுமுறை தினம் என்றால் வாடிக்கையாளர்கள் சற்று சிரமப்படுவார்கள். இதனால் விடுமுறை தினத்தை கணக்கில் கொண்டு முன்கூட்டியே வங்கிப் பணிகளை முடிக்க வேண்டும். இந்த நிலையில் மார்ச் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்றவைகளை சேர்த்து 14 நாட்கள் விடுமுறை. அதன்பிறகு சில மாநிலங்களுக்கு குறிப்பிட்ட பண்டிகை தினங்களில் விடுமுறை வழங்கப்படும்.
இந்நிலையில் மார்ச் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை. மார்ச் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை சாப்சர்குட் பண்டிகையை முன்னிட்டு மிசோரம் மாநிலத்திற்கு மட்டும் விடுமுறை. மார்ச் 8-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வார விடுமுறை. மார்ச் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை. மார்ச் 13ஆம் தேதி வியாழக்கிழமை ஹோலிகா தஹான், ஆட்டுக்கல் பொங்கல் பண்டிகை போன்றவற்றை முன்னிட்டு உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், ஜார்கண்ட் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு விடுமுறை. மார்ச் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாகலாந்து, மணிப்பூர், திரிபுரா, ஒடிசா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை தவிர்த்து மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் விடுமுறை.
மார்ச் 15ஆம் தேதி சனிக்கிழமை ஹோலி பண்டிகையை முன்னிட்டு அகர்தலா, இம்பால், புவனேஸ்வர் மற்றும் பாட்னா ஆகிய நகரங்களில் விடுமுறை. மார்ச் 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை. மார்ச் 22ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் வார விடுமுறை. மார்ச் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை. மார்ச் 27 ஆம் தேதி வியாழக்கிழமை ஜம்மு காஷ்மீருக்கு விடுமுறை. மார்ச் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் ஜம்மு காஷ்மீருக்கு விடுமுறை. மார்ச் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை. மேலும் மார்ச் 31-ம் தேதி திங்கள்கிழமை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை.