
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 8280 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகள் நேரடி பணி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.04.2025
பணியின் விவரம்:
பணி பெயர்: சமையல் உதவியாளர்
மொத்த காலியிடங்கள்: 8280
கல்வித் தகுதி: குறைந்தது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 முதல் 40 வயது வரை.
சம்பளம்: பணி நியமனத்திலிருந்து முதல் ஓராண்டு தொகுப்பூதியம் வழங்கப்படும். பின்னர், நிலை-1 அடிப்படையில் ரூ.3000 – ரூ.9000 ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு முறை: நேர்காணல் (Interview) மூலம் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள், தங்களது மாவட்ட ஆட்சியர் இணையதளங்களில் (District Websites) கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் / நகராட்சி அலுவகம் / மாநகராட்சி அலுவகம் ஆகியவற்றிற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்திற்கு இணைக்க வேண்டிய ஆவணங்கள்:
பள்ளி மாற்றுச் சான்றிதழ்
10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
குடும்ப அட்டை / ஆதார் அட்டை
இருப்பிட சான்று
சாதிச் சான்று
வாக்காளர் அடையாள அட்டை
(தேவையானவர்கள் மட்டுமே) விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்கள் சான்றுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சான்றுகள்.
நேர்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் அசல் ஆவணங்களுடன் நேரில் கலந்துகொள்ள வேண்டும்.