நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். ரேஷன் கடைகள் என்பது குறிப்பிட்ட நாள்களிலும், நேரத்திலும் திறந்திருக்க வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் இதை மீறி ஒரு சில நியாய விலை கடைகள் பூட்டப்பட்டு இருக்கும்.

இவ்வாறு பூட்டப்பட்டிருக்கும் நியாய விலை கடைகள் குறித்து பொதுமக்கள் எஸ்எம்எஸ் மூலமாக புகார் அளிப்பதற்கு பொது விநியோகத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி “9773904050” என்ற எண்ணிற்கு தங்களுடைய செல்போனில் இருந்து “PDS 102 மூடப்பட்டுள்ளது” என்று டைப் செய்து மெசேஜ் அனுப்பலாம். இதன் மூலமாக உங்களுடைய புகாரின் பேரில் விசாரணை செய்து அக்கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.