
சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது, குடும்ப அட்டை தொலைந்தவர்கள் 50 ரூபாய் செலுத்தி குடும்ப அட்டை நகலை பெற்று பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். 2023 ஏப்ரல் 5 அன்று துவங்கப்பட்ட இந்த திட்டத்தின்படி குடும்ப அட்டையை தொலைத்த 9 லட்சத்து 44ஆயிரத்து 452 நகல் குடும்ப அட்டைகள் வழங்கப்பப்பட்டுள்ளன.
நுகர்வோர் வாணிபக் கழகத்தில் 3500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படும். தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பழமையான 6 சேமிப்பு வளாகங்களில் உள்ள 30 கிடங்கு கட்டிடங்கள் ரூ.17.49 கோடியில் புனரமைக்கப்படும்.