ரேஷன் கடை மூலமாக கஷ்டப்பட்ட மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி ஆகியவை வழங்கபடுகிறது. இவ்வாறு வழங்கப்படும் பொருட்களை மக்கள் வாங்காமல் இருந்து வருவதால், கடைகளில் தேங்கி நிற்கிறது. இதை பயன்படுத்தி ஊழியர்கள் சிலர் கள்ளச்சந்தையில் விற்றுவிடுகின்றனர்.  மேலும் ஒருசில நேரங்களில் பொருட்கள் தரமற்றதாக இருப்பதாகவும் குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. இப்படி ரேஷன் பொருட்கள் தரமில்லாதபோது நேரில் கேள்வி கேட்டால் பிரச்னை வரும்.

எனவே ஆன்லைன் மூலமாக புகார் அளிக்க பொதுவிநியோகத் துறை வசதி செய்துள்ளது. https://www.tnpds.gov.in/ பக்கத்துக்கு சென்று, “புகாரை பதிவு செய்ய” என குறிப்பிடப்பட்ட இடத்தை அழுத்தியதும் திறக்கும் பக்கத்தில், பெயர், மொபைல் எண், மின்னஞ்சல், பிரச்னையை பதிவிட்டு “பதிவு செய்ய” என்பதை அழுத்தினால் புகார் சென்றுவிடும்.