
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூ.ரி காமெடி நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார் . கடைசியாக விடுதலை-2 படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் ஏழு இடங்களில் குடிநீர் மையங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியம், சூரி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மக்களுக்கு நடிகர் சூரி வைத்த வேண்டுகோள்#actor #soori #people #speech #ThanthiTV pic.twitter.com/J1d9r5JVDi
— Thanthi TV (@ThanthiTV) March 30, 2025
இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய சூரி, “இந்த பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் முக்கியம் . நாம் மட்டும் இல்லை. தாவரங்கள், விலங்குங்கள், பறவைகள் என அனைத்துமே நமக்கு முக்கியம்தான். எனவே உங்களால் முடிந்தவரை வீட்டின் வாசல், ஜன்னல், பால்கனி ஆகிய இடங்களில் பறவைகளுக்காக கொஞ்சம் தண்ணீர் வையுங்கள் “என்று கூறியுள்ளார்.