
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் வரை மழை நீடிக்கும். தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி கன்னியாகுமரி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாகப்பட்டினம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.