
தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நாள்தோறும் ஆயிரங்கணக்கான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், பொது மக்களின் நலனுக்காக அவர்களின் பகுதிக்கு அருகிலேயே வாரந்தோறும் மருத்துவ காப்பீட்டு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 234 தொகுதிகளிலும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்க்கும் முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
முதலாவதாக 100 தொகுதிகளில் மருத்துவக் காப்பீட்டு பயனாளிகளை பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று கூறினார். முன்னதாக, மருத்துவ காப்பீட்டுக்கான பிரிமியம் தொகை 7849 ஆகவும், அதற்கான காப்புறுதித் தொகை வருடத்திற்கு 5 லட்சமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.