நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளராக சிவ. இளங்கோ ‌ பதவி வகித்து வந்தார். இவர் தற்போது கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைவதற்கு முன்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டம் மற்றும் கிராமசபை போன்றவைகள் குறித்து கட்சியினருக்கு பயிற்சி வழங்கி வந்துள்ளார்.

இந்த பயிற்சிகளை வழங்க தாங்கள் கேட்டுக் கொண்டால் கட்சியிலிருந்து விலகினாலும் தொடர்ந்து பயிற்சி வழங்க தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவி விலகியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.