
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிச்சாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் டெல்லி தேர்தல் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, டெல்லியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பியதால் தான் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா கூட்டணி இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. டெல்லி சட்டமன்றத் தேர்தலை பார்க்கும்போது காங்கிரஸ் கட்சி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. அதிமுக 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பலமான கூட்டணி அமைத்து போட்டியிடும். மேலும் அதிமுகவை பொறுத்த வரையில் கொள்கை என்பது வேறு கூட்டணி என்பது வேறு என்று கூறினார்.