தென்காசி மாவட்டத்தில் உள்ள நொச்சிகுளம் பகுதியில் மரியா ஆரோக்கிய செல்வி (30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி முத்துக்குமார் என்ற கணவர் இருந்துள்ளார். கடந்த 5-ம் தேதி தன்னுடைய கணவர் மஞ்சள் காமாலை நோயின் காரணமாக வீட்டில் மயங்கி விழுந்ததாக கூறி மரியா 108 ஆம்புலன்ஸை வரவழைத்தார். பின்னர் ஆம்புலன்ஸில் இருந்த நர்ஸ் முத்துக்குமாரை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. ஆனால் அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அந்த தகவலின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முத்துக்குமார் சடலத்தை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் மரியா கிராம நிர்வாக அலுவலரை சந்தித்தார். அதாவது தன்னுடைய கணவர் மது குடித்துவிட்டு தினசரி வந்து தகராறு செய்ததால் என்னுடைய 12 வயது மகனுடன் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து  கொலை செய்ததாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கையிலும் முத்துக்குமார் கொலை செய்யப்பட்டது உறுதியானது. மேலும் இதைத் தொடர்ந்து மரியா மற்றும் அவருடைய 12 வயது மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.