
2024 MT1 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் மணிக்கு 65 ஆயிரத்து 215 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாசா எச்சரித்துள்ளது. தோராயமாக 260 அடி விட்டம் கொண்ட அந்த விண்கல் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட பெரியது. விண்கல் பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் ஜூலை எட்டாம் தேதி கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அதன் பாதையை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள்.