மணிப்பூரில் இரு சமுதாயத்தினர் கிடையே ஏற்பட்ட பெரும் தகராறில் ஏற்பட்ட கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்தனர். இந்த கலவரத்தில் குக்கி சமூக இனத்தை சேர்ந்த இரு பெண்களை நிர்வாணமாக சாலையில் இழுத்துச் சென்ற கொடூர சம்பவங்களும் அரங்கேறியது. இந்த வன்முறை கடந்த வருடம் மே மாதம் தொடங்கிய நிலையில் இன்னமும் நீடிக்கிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால் மணிப்பூரில் தொடர் பதற்றம் நிலவுகிறது. இந்த கலவரங்களால் சுமார் 70 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கி வரும் நிலையில் தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக வன்முறை சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள்.

இந்நிலையில் மணிப்பூரில் ஏற்பட்டுள்ள தாக்குதல்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி மாணவர்கள் அமைப்பினர் ஆளுநர் மாளிகையை நோக்கி இன்று பேரணி சென்றனர். அப்போது சிஆர்எப் வீரர்களின் கான்வாய் வாகனத்தின் மீது திடீரென மாணவர்கள் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அதோடு சிஆர்எஃப் வீரர்களை மாணவர்கள் அமைப்பினர் விரட்டி அடித்தனர். அதோடு ஆளுநர் வீட்டின் முன்பாக ஏராளமான மாணவர்கள் திரண்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் ‌ நிலவுகிறது. மேலும் வங்கதேசத்தில் மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக மாறிய நிலையில் அதிபர் ஷேக் ஹசினா பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.