
சாதி, மதத்தின் பெயரில் தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருகின்றனர் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, தேர்தலில் போட்டியிட அல்ல மக்கள் பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் தி.மு.க. இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் எமர்ஜென்சியை எதிர்த்ததால் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது.
விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாக சொல்லி கடந்த 1991ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுகவைப் போல் வெற்றியடைந்த கட்சியும் இல்லை, தோல்வியடைந்த கட்சியும் இல்லை. ஆட்சிக்காக அண்ணா திமுகவை தொடங்கவில்லை. ஆட்சியைப் பற்றி கவலைப்படாமல் மக்களுக்காகவும் ஜனநாயகத்துக்காகவும் குரல் கொடுத்தவர்தான் கருணாநிதி என்று அவர் தெரிவித்தார்.