முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்தியராஜ் அவர்கள்,40க்கு 40 அடிச்சு இந்த மத புயல் உள்ள வராம பண்ணாங்க பாருங்க தம்பி சேகர்பாபு உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள்தான் இதற்கு காரணம். எம்எல்ஏ வாக இருக்கலாம் எம்பியாக இருக்கலாம் வட்ட செயலாளர்களாக இருக்கலாம் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். சென்டர் பாயின்ட் என்றால் அது தந்தை பெரியாருடைய கருத்து தான்.

எல்லா கட்சிகளிலும் தனிமனித குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் தத்துவ குறைபாடுகள் இருக்கக் கூடாது. அந்த தத்துவ குறைபாடுகள் இல்லாத இயக்கம் தான் பெரியார் வழியில் அண்ணா வழியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் வழியில் இன்று தளபதி ஸ்டாலின் வழியில் வந்த திராவிட முன்னேற்ற கழகம். அந்த தத்துவ குறைபாடு இல்லாத கேடயத்தை வைத்து தான் தத்துவ குறைபாடுள்ள, தத்துவ அயோக்கியத்தனம் உள்ள தத்துவ அடக்குமுறை உள்ள ஒரு தீய சக்தியை நாம் தடுத்து நிறுத்த வேண்டிய இடத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்