
நாடு முழுவதும் கடந்த 26 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து பெற்றோர்கள் மகிழ்ந்தனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் இந்திய கலாச்சாரத்தை எடுத்துரைப்பது போல் இருக்கிறது. அதாவது முஸ்லீம் தம்பதி ஒருவர் தங்களுடைய மகனுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்துள்ளனர். அவர்கள் தங்கள் மகனை ஸ்கூட்டியில் வைத்து அழைத்துச் செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருவதோடு பலரும் பாராட்டி வருகிறார்கள்.
ఒక ముస్లిం కుటుంబం జన్మాష్టమికి తమ పిల్లవాడికి కృష్ణుడి వేషం వేసింది
pic.twitter.com/FGecVXiLL6
— Syed Mahaboob Basha (@Smahaboob17) August 27, 2024