
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் அதே சமயம் சில பகுதிகளில் மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 26ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும்.
அதே நேரத்தில் மழையும் பெய்யும். அந்த வகையில் இன்று பிற்பகல் ஒரு மணி வரையில் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதன்படி திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர், நீலகிரி, தேனி, கோயம்புத்தூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.