இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை மானிய கோரிக்கையில் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றினார். அப்பொழுது ஒலிம்பிக் தரத்தில் நீச்சல் குளம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமியில்  டைவிங் பூல் உடன் கூடிய ஒலிம்பிக் தரத்திலான குளம் நீச்சல் குளம் அமைக்கப்படும்.

தென் தமிழகத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் பதக்கம் வெல்லும் நோக்கமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் புதிய நீச்சல் குளம் ஒன்றும் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.