
மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுத்தாவணி பகுதியில் பிரபலமான தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர்கள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்குள்ள உணவகத்தில் முத்துலட்சுமி (70) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் இன்று மருத்துவமனையில் 6-வது தளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இது தொடர்பாக மாட்டுத்தாவணி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில் முத்துலட்சுமி அணிந்திருந்த தங்கநகை காணாமல் போனதால் அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. ஒரு மருத்துவமனையிலேயே துணிச்சலாக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் கடந்த 8-ம் தேதி காசம்மாள் (70) என்றும் மூதாட்டி 65 பவுன் தங்க நகைகளுக்காக கொலை செய்யப்பட்டார். இதேபோன்று நேற்று முன்தினம் 56 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தோப்புக்குள் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அதோடு நேற்று பாப்பு என்ற மூதாட்டியும் கொலை செய்யப்பட்டார். மேலும் ஒரு வாரத்திற்குள் அடுத்தடுத்து நகைகளுக்காக 4 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.