
மதுரையை மதுரைக்காரர்கள் மட்டுமல்ல எல்லோருமே போற்றலாம் என மாமதுரை விழாவில் காணொளி காட்சி மூலமாக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். மாமதுரை விழா இன்று நடைபெறும் நிலையில் இதில் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று மதுரை. 2000 ஆண்டு வரலாறு கொண்டது.
தவறு செய்தது மன்னனே என்றாலும் மன்னனை கண்ணகி கேள்வி கேட்ட மண் இது. நீதியை காக்க தன் உயிரைத் தந்த மன்னர் ஆட்சி செய்த மண் மதுரை மண் என்று பல்வேறு வரலாறுகளைக் கொண்ட மதுரையை மதுரைக்காரர்கள் மட்டுமல்ல தமிழர்களாகிய அனைவருமே போற்றலாம் என்று முதல்வர் கூறியுள்ளார்.