
மதுரை மாவட்டம் கோச்சடை பகுதியில் மரக்கதவுகள் செய்யக்கூடிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
ஞாயிற்றுக்கிழமை யான இன்று விடுமுறை என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டு கோடி மதிப்பிலான மரப்பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.