மதுரை மாவட்டத்திலிருந்து பெங்களூருக்கு நாளை முதல் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் சேவை நாளை முதல் ஜூலை 29ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதன்படி மதுரையிலிருந்து நாளை அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் ரயில் திருச்சிக்கு காலை 7:00 மணிக்கு வரும்.

இதைத்தொடர்ந்து கரூர், சேலம் வழியாக மதியம் 1 மணிக்கு பெங்களுருவை சென்றடையும். மேலும் இதேபோன்று மறு மார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து மதியம் 1:45 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 7:35 மணிக்கு திருச்சியை வந்தடையும். இதைத்தொடர்ந்து இரவு 9.45 மணிக்கு மதுரையை சென்றடையும்.