
வேலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் பகுதியில் தனுஷ் சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இதில் சினேகாவின் தந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவரை பார்ப்பதற்காக தன்னுடைய குழந்தை ரித்திகாவுடன் சினேகா தஞ்சைக்கு புறப்பட்டார். அவர் நேற்று முன்தினம் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்ற நிலையில் அவருடைய கணவர் சினேகாவை பின்தொடர்ந்து வந்தார். அவர் தன் மனைவியிடம் மது குடிக்க 150 ரூபாய் பணம் கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என கூறியதால் சினேகாவை பேருந்து நிலையத்தில் வைத்தே அவருடைய கணவர் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இதனால் கோபம் அடைந்த சினேகா நீயும் வேண்டாம் உன் குழந்தையும் வேண்டாம் என கூறி அங்கிருந்த சாலையில் குழந்தையை தூக்கி வீசிவிட்டார். இதில் குழந்தை காயமடைந்து வலியால் கதறி அழுதது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு முதலுதவி கொடுத்த நிலையில் கிளம்பி சென்று சினேகா சிறிது நேரத்தில் மீண்டும் வந்தார். இதைத்தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆம்புலன்ஸ் மூலமாக குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தன் குழந்தையுடன் சினேகாவும் சென்றார்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.