இங்கிலாந்து நாட்டில் சவுத்கேட் என்ற இடத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அர்ஜுன் சிங் வித் பிக் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகன் டீக்கன் பால் சிங் விக் ஆவார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது தந்தையை ஷாம்பெயின் பாட்டிலால் குத்தி கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக டீக்கன் பால் சிங் விக்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவருடைய வீட்டை போலீசார் சோதனை செய்துள்ளனர்.

இந்த சோதனையில் டீக்கண் தனது படுக்கைக்கு கீழே 100 ஷாம்பெயின் பாட்டில்கள், 10 அமேசான் டெலிவரி பெட்டிகளில் விஸ்கி பாட்டில்கள் உள்ளிட்டவற்றை போட்டு வைத்திருந்தார். இதனை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அவர் கோர்ட்டில் ஆச்சார்படுத்தப்பட்டுள்ளார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் தான் குற்றம் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அதே நேரத்தில் தனது தந்தையை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தாக்கவில்லை எனவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து டீக்கன் பால் சிங் விக்கிற்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.