கேரள மாநிலம் கோழிக்கோடு பந்தீரம்காவு என்ற பகுதியில் பெரிய அளவில் மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த 9ம் தேதி இரண்டு இளைஞர்கள் இந்த மதுபான கடைக்கு சென்று உள்ளனர். அதில் ஒரு நபர் மதுபானம் வாங்குவது போல நடித்து அங்கிருந்த ஒரு பாட்டிலை எடுத்து இடுப்பில் சொருகி உள்ளார்.

அதன் பிறகு அங்கிருந்து நைசாக கிளம்பினார். அங்கு நடந்த காட்சிகள் அனைத்தையும் சிசிடிவியில் பார்த்த கடை ஊழியர்கள் நேராக அந்த இளைஞர்களிடம் சென்று இடுப்பில் இருந்த பாட்டிலை பறிமுதல் செய்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த இளைஞர்கள் திகைத்துப் போய் நின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.