தமிழ்நாட்டில் கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக புதிய மதுபானம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 90 மி.லி மது டெட்ரா பேக் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறதாம். இது தீபாவளி பண்டிகையிலிருந்து அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

அதாவது குவார்ட்டர் ரூ.140-க்கு மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கூலி வேலை செய்பவர்களால் அதை வாங்கி குடிக்க முடியாததால் கள்ளச்சாராயம் வாங்கி குடிப்பதாக தகவல் பரவியது. இதனால் தற்போது பாக்கெட்டுகளில் 90 மிலி மதுவை ரூ‌.80-க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனராம். இது தொடர்பாக ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் அதிகாரிகள் கேட்டறிந்துள்ளனராம். மேலும் மது டெட்ரா பேக் தெலுங்கானா மாநிலத்தில் தான் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.