
சூர்யாவின் அஞ்சான் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் தலிப் தாகிலுக்கு 2 மாதம் சிறை தண்டனை விதித்து பாந்த்ரா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2018ம் ஆண்டு மதுபோதையில் கார் ஓட்டிய தாகில், ஆட்டோ மீது மோதியதில் இருவர் படுகாயம் அடைந்தனர். 5 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், தாகிலுக்கு 2 மாதம் சிறை விதித்த நீதிமன்றம், குற்றம் நிரூபணம் ஆனதால் அபராதம் மட்டும் விதிக்க முடியாது என விளக்கமளித்துள்ளது.