
உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சசின் காசியப் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 17ஆம் தேதி தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு மது போதையில் சென்றுள்ளார். அப்போது அவருடைய அண்ணி மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில் அங்கிருந்த பொருட்களை தூக்கி வெளியே வீசுகிறார். இது தொடர்பாக அந்தப் பெண் கேட்க கோபத்தில் அவரை கொடூரமான முறையில் அடித்து தாக்குகிறார்.
அவர்களுடைய சத்தத்தை கேட்ட சசினின் தாயார் உடனடியாக அறையில் இருந்து வெளியே வந்து அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினார். இதை தொடர்ந்து ஒரு சிறுவன் அந்த பெண்ணை அங்கிருந்து அழைத்து சென்றான். அவர் அங்கிருந்து போன பிறகு சசினை அவருடைய தாயார் கடுமையான வார்த்தைகளால் திட்டினார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் அவர்கள் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
मुरादाबाद -युवक ने अपनी भाभी को बेरहमी से पीटा, बचाने आई मां के साथ युवक ने की मारपीट
मां,भाभी के साथ मारपीट,घटना CCTV में कैद, युवक पर मां,अन्य परिजनों से मारपीट का आरोप, मुगलपुरा थाना क्षेत्र की घटना#Moradabad @moradabadpolice @Uppolice pic.twitter.com/Ycf8wJMxti
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) February 19, 2025