மத்திய அரசு பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச தையல் மெஷின் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் பெண்கள் மட்டும் இன்றி ஆண்களும் பயன்பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் இலவச தையல் மிஷினை பெற்று வேலைவாய்ப்பு பெறலாம். இந்த திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கும் நிலையில் தகுதியுள்ளவர்களின் வங்கி கணக்கில் ரூ.15,000 நேரடியாக டெபாசிட் செய்யப்படும். இதன்மூலம் தையல் மெஷின் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் பயன்பெற இந்திய குடிமகனாக இருப்பதோடு இலவச தையல் இயந்திர திட்டத்தின் கீழ் ஏற்கனவே தையல் தொழில் செய்பவர்கள் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும். இந்த திட்டத்தில் பயன்பெற ஆதார் அட்டை, முகவரி சான்றிதழ், அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, மொபைல் எண் மற்றும் வங்கி பாஸ்புக் போன்றவைகள் முக்கியமான ஆவணங்கள். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க CSC மையத்திற்கு செல்ல வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க ஆன்லைனில் https://pmvishwakarma.gov.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.