
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ காப்பீட்டை பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். இதற்கு முதலில் healthid.ndhm.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அந்த இணையதளத்திற்கு சென்றதும், அதன் திரையில் Create ABHA number என இருக்கும். அந்த ABHA number-ஐ அழுத்தி ஆதார் அல்லது டிரைவிங் லைசன்ஸ் எண், கேப்ட்சா பதிவிட்டு உள்நுழைய வேண்டும்.
ஆதார் எண் வைத்து உள்நுழைகையில், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எனப்படும் ஒரு முறை பயன்படுத்தப்படும் எண் வரும். அந்த எண்ணை பதிவிட்டு உள்ளே சென்றால், அங்கு மருத்துவ காப்பீடு அட்டை இருக்கும். அதை பதிவிறக்கும் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். மொத்தம் 1,354 சிகிச்சைகளுக்கு அதை பயன்படுத்தலாம். இதில் இதய அறுவை சிகிச்சைகள், மன ஆரோக்கியம், பல் சிகிச்சைகளும் அடங்கும்.