மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்,.1 ஆம் தேதி நாட்டின் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அடுத்த வருடம் நாட்டில் நாடாளுமன்ற பொது தேர்தல்கள் நடைபெற உள்ளது. இத்தேர்தல்களில் மத்திய ஊழியர்களின் நிலைப்பாடு மிகவும் முக்கியமானது ஆகும். இந்த வகுப்பை கவர்ந்திழுக்க அரசாங்கம் பல்வேறு வித நடவடிக்கைகளை எடுக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடும் என சொல்லப்படுகிறது.

இதனிடையே 8-வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை வெளியிடுமாறு ஊழியர் அமைப்புகள் கோரி வருகின்றன. கடந்த 7வது மத்திய ஊதியக்குழுவில், ஊழியர்களுக்கு மிக குறைந்த ஊதிய உயர்வுதான் கிடைத்தது. எனினும் ஊழியர்களுக்கு ஒரு தானியங்கி முறையை உருவாக்க அரசு ஆலோசித்து வருகிறது. இதனால் வருடந்தோறும் ஊழியர்களின் சம்பளம் தானாகவே மாற்றியமைக்கப்படும். இதற்கென அரசாங்கம் விரைவில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.