
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் வழங்கப்படும் முதல் பரிசு அகவிலைப்படி அதிகரிப்பாகவும், 2-வது பரிசு ஃபிட்மென்ட் ஃபாக்டரின் உயர்வாகவும் இருக்கலாம். மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, ஜூலை மாதம் பிட்மென்ட் ஃபாக்டரை உயர்த்தி அறிவிக்கக்கூடும். பிட்மென்ட் பாக்டரை உயர்த்தவேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட தினங்களாக கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிட்மென்ட் பாக்டர் உயர்த்தப்பட்டால் அதன் கீழ் அடிப்படை சம்பளத்தில் அதிகரிப்பு ஏற்படும். ஜனவரி மாத அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்ட பின், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 42% ஆக அதிகரித்து உள்ளது. தற்போது இதில் மேலும் 4% அதிகரித்தால், DA 46 சதவீதமாக உயரும். 7-வது ஊதியக்குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் DA வருடத்திற்கு 2 முறை அதிகரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 2023-ன் அகவிலைப்படி மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. தற்போது ஜூலை 2023ன் அகவிலைப்படி அடுத்தது அறிவிக்கப்படும்.