
ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) மாதாந்திர ஓய்வூதிய நிர்ணயத்துக்கான ஃபார்முலாவை மாற்ற பரிசீலனை மேற்கொண்டு வருகிறது. பார்முலாவை மாற்றுவதன் வாயிலாக முழு ஓய்வூதிய சேவையின்போது பெறப்பட்ட சராசரி ஓய்வூதிய ஊதியத்தின் அடிப்படையில் மாதாந்திர ஓய்வூதியம் தீர்மானிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எனினும் ஓய்வூதியம், அதற்கான தொகை மற்றும் ஆபத்து போன்றவற்றை மதிப்பிடும் “ஆக்சுவரி” அறிக்கை வந்த பின்பே இதுகுறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.
இப்போது EPFO ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தின்(இபிஎஸ்-95) கீழ் மாதாந்திர ஓய்வூதியத்தை நிர்ணயிப்பதற்கு ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் (கடந்த 60 மாதங்களின் சராசரி சம்பளம்) மடங்கு ஓய்வூதிய சேவை 70ஐப் பயன்படுத்துகிறது. அதிகமான ஓய்வூதியத்தை தேர்வு செய்யும் நபரின் கடந்த 60 மாதங்களுக்குரிய சராசரி சம்பளம் ரூ.80,000 எனவும் அவரது ஓய்வூதியம் பெறக்கூடிய வேலை 32 வருடங்கள் எனவும் வைத்துக்கொள்வோம்.
இதில் இப்போதுள்ள பார்முலாவின் கீழ் (80,000 மடங்கு 32/70) அவருடைய ஓய்வூதியமானது ரூ.36,571 ஆக இருக்கும். மற்றொருபுறம் முழு ஓய்வூதிய வேலையின்போது சராசரி சம்பளத்தை எடுத்துக்கொள்ளும் போது வேலையின் ஆரம்ப நாட்களில் சம்பளம் குறைவாக உள்ளதால், மாதாந்திர ஓய்வூதியத்தின் நிர்ணயம் குறைவாக இருக்கும். அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்ய முதலாளிகள் உடன் கூட்டு விருப்ப படிவத்தை நிரப்பும் விதமாக தன் சந்தாதாரர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு ஆன்லைன் வசதியினை வழங்கி உள்ளது.