மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் வருடத்தில் இரண்டு முறை அகல விலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே ஜனவரி மாதம் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. தற்போது ஜூலை மாதத்திற்கான அகல விலைப்படி உயர்வை எதிர்நோக்கி ஊழியர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அகல விலைப்படி குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதாவது வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இருந்து மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகல விலைப்படி உயர்வு வழங்கப்படும் நிலையில் 7000 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை அகலவிலை படியாக கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது 16 ஆயிரம் ரூபாய் அடிப்படை ஊதியமாக பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7078 ரூபாயும், 25 ஆயிரம் ரூபாய் அடிப்படை ஊதியமாக பெரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி 11,124 ரூபாயும், முப்பதாயிரம் ரூபாய் அடிப்படை ஊதியமாக பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகல விலைப்படி 13 ஆயிரம் ரூபாயும், 37 ஆயிரம் ரூபாய் அடிப்படை உதவியமாக பெறும் ஊழியர்களுக்கு அகலவிலைப்படி 16,432 ரூபாயும் கிடைக்க வாய்ப்புள்ளதாக அரசு சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.