
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி லீவ் பயண சலுகையை கோருவதற்கான தளர்வு தொடர்பான விதிகளையும் மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது. பதிவு செய்யப்பட்ட பயண முகவர்களின் இணையதளத்தில் ஒரு ஊழியர் எல்டிசி நோக்கத்திற்காக விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தால் சலுகைகள் கிடைக்கும்.
அதன்படி Balmer Lawrie & Company Limited, Ashok Travels & Tours, Indian Railways Catering and Tourism Corporation Ltd ஆகிய நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் விமான டிக்கெட் ஊழியர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். அரசின் இந்த சலுகைகளை பயன்படுத்தி மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய விடுமுறை நாட்களை கொண்டாடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.