சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இப்போது 11,409 காலிபணியிடங்களுக்கு மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு தமிழ் உட்பட 13 வட்டார மொழிகளில் நடத்தப்பட்டுள்ளது. வருகிற ஒன்றாம் தேதி இதற்கான இலவச வகுப்புகள் சிவகங்கை -திருப்பத்தூர் ரோட்டில் உள்ள படிப்பு வட்டத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த இலவச பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெற்றுக் கொள்ளலாம். மேலும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயன்பெறும் விதமாக வேலை வாய்ப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு போட்டி தேர்வுகளுக்கு தேவையான பாட குறிப்புகள் மற்றும் வினா, விடைகள் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.