
இந்திய பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாக பொறுப்பேற்ற நிலையில் முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதன்படி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஜூலை 22ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அன்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் முழு பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் புதிய தகவல் வெளிவந்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் இந்த மாதம் தொடங்கும் நிலையில் முதலில் பொருளாதார ஆய்வு அறிக்கையும், 2-ம் நாளில் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
பொருளாதார ஆய்வறிக்கை 2024 பட்ஜெட்டுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும். இந்த பொருளாதார ஆய்வு என்பது ஒரு வருடத்தில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வருடாந்திர கணக்காகும். இதன் அடிப்படையில் கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருந்தது என்பது குறித்து மதிப்பீட்டு பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதன் அடிப்படையில் அரசுக்கு ஆலோசனை வழங்கப்படும் நிலையில் அவற்றை செயல்படுத்த வேண்டுமா இல்லையா என்பது குறித்து அரசு முடிவு எடுக்கும். இதன் அடிப்படையில் கடந்த வருடத்திற்கும் நடப்பாண்டிற்கும் உள்ள விலை விவரங்களும் தெரியவரும். மேலும் இது போன்ற நிறைய அம்சங்கள் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரியவரும் என்பதால் தான் பொருளாதார ஆய்வுறிக்கை சமர்ப்பித்த பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று ஜூலை மாதத்தில் தாக்கல் செய்கிறார்கள்.