
சீனாவில் நிகழ்ந்த ஒரு விவாதத்துக்குரிய திருமண சடங்கில், மணமகனின் நண்பர்கள் சிலர் மணமகளை தூக்கிச்சென்று கம்பத்தில் டேப்பால் கட்டிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டதையடுத்து, மக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். திருமண ஆடையில் இருந்த மணமகள், உதவி கேட்டு அழைத்தும், அருகில் இருந்தவர்களால் உதவி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் பலரின் கோபத்தை தூண்டியது.
இச்சம்பவம் குறித்து பேசிய மணமகனின் நண்பர் யாங், இது ஒரு “விளையாட்டு” மாதிரியான சடங்கு என்றும், மணமக்கள் இருவரும் இதை முன்பே அறிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர் கூறியதன்படி, இது சீனாவில் சில பகுதிகளில் காணப்படும் மரபு போன்றதாகும். திருமணத்துக்கு சம்மந்தப்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் இதை ஒரு அசாதாரணமான ரீதியில் பார்த்து அனுபவித்தனர் என அவர் விளக்கினார்.
இது தொடர்பாக ஒருவர் கமெண்டில் அடுத்தவரின் துன்பத்தை பார்த்து நீங்கள் சந்தோஷப்படுவது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார். அதேபோன்று மற்றொருவர் ஒருவேளை மணமகளுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அதற்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது சடங்கு என்று கூறப்பட்டாலும் திருமணத்திற்காக மனக்கோலத்தில் ஆசையாக காத்திருந்த பெண்ணை கம்பத்தில் கட்டி வைப்பது மிகவும் கொடுமையானது என்று பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.