தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 29 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியன் படம் வெளியான நிலையில் தற்போது இந்தியன் பார்ட் 2 வெளியாகியுள்ளது. இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் விமர்சனங்கள் வருகின்றனர்.

இந்த விமர்சனங்கள் குறித்து பாபி சிம்ஹாவிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது, “எல்லாரும் தங்களை அறிவாளியாக நினைத்துக் கொள்கிறார்கள். ஒரு விஷயம் நல்லா இருக்கு என்றால் நல்லா இருக்குன்னு சொன்னாள் அவன் முட்டாள் என்று நினைத்துக் கொள்வார்கள். அதேபோன்று ஏதோ நொட்டு சாக்கு சொல்லணும்னு ஏதோ பேசிக்கிட்டு இருக்காங்க. அவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. நமக்குத் தேவை எல்லாம் ஆடியன்ஸ், ஃபேமிலி கிரவுடு மட்டும் தான்” என்று கூறியுள்ளார்.