பரபரப்பாக நடந்து முடிந்த டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி  இந்திய அணி வெற்றி பெற்றது. கடைசிவரை இந்தியாவுக்கு செம டஃப் கொடுத்த தென்னாப்பிரிக்கா அணி தோல்வியை சந்தித்தாலும் நிச்சயம் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். அந்த அளவுக்கு முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுடனான போட்டியில் சிறப்பான முறையில் விளையாடியது. இந்நிலையில் உலகக்கோப்பை முடிவடைந்த பிறகு தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் ஏய்டன் மார்க்ரம் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் பேசியதாவது, எனக்கு இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. மனசு ரொம்ப வலிக்கிறது. இதிலிருந்து மீண்டு வர சில காலங்களாகும். இருப்பினும் பந்துவீச்சாளர்கள் மற்றும் மொத்த அணியினருக்கும் கண்டிப்பாக பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். நாங்கள் சிறப்பாக பந்து வீசியதோடு எங்களால் முடிந்த ஸ்கோரில் அவர்களை கட்டுப்படுத்தினோம். நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்த போதிலும் இன்றைய கிரிக்கெட் சூழல் எங்களுக்கு சாதகமாக இல்லை. இருப்பினும் நாங்கள் கடைசி வரை சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதியான அணி என்பதை நிரூபித்துள்ளோம். இந்த முடிவு நல்ல முறையில் அமையும் என்று நம்புவதோடு கடைசி வரை அவர்களுக்கு டஃப் கொடுத்ததில் பெருமை கொள்கிறோம். மேலும் எங்கள் திறமையை நல்ல முறையில் வெளிக்கொண்டு வருவோம் என்று நம்புவதாக கூறினார்.