
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காட்டு சித்தா ஊர் கிராமத்தில் நீலமேகன்(42) என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி மலர்விழி(38). இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆன நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக மலர்விழி மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
நீலமேகம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். மலர்விழிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த ஏப்ரல் நான்காம் தேதி சிகிச்சைக்கு சென்று வந்துள்ளார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த மலர்விழி 30 மாத்திரைகளை விழுங்கியுள்ளார். அதனால் மலர்விழி மயங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீலமேகன் மலர்விழியை திருவண்ணாமலையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மலர்விழி கடந்த புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.