
பிரபல யூடியூபர் இர்பான் முதன்முதலாக தன்னுடைய குழந்தையின் பாலினத்தை தெரிவித்தது, பின்னர் குழந்தை பிறப்பின் போது தொப்புள் கொடியை வெட்டியது போன்ற அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினார். இதற்கு மன்னிப்பும் கேட்டார். இர்பான் அடிக்கடி விதவிதமான உணவுகளை சாப்பிட்டு வீடியோவாக எடுத்து பிரபலமானார். பின்பு செலிபிரிட்டிகளை இன்டெர்வியூ எடுத்து வீடியோ போட்டு வந்த நிலையில் தற்போது ஒரு செலிபிரிட்டியாகவே மாறிவிட்டார். ஆனால் அவரை சுற்றி சர்ச்சைகளுக்கும் அதிகமாக இடம்பெற்று வருகிறது.
இவர் எதை செய்தாலுமே அதை வீடியோவாக எடுத்து பதிவிடுவது வழக்கம். இந்த நிலையில் ரம்ஜான் தினமான நேற்று முன்தினம் இவர் தன்னுடைய குடும்பத்தோடு காரில் சென்று இல்லாதவர்களுக்கு உணவை வழங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒருவர் உணவை பறித்து வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு இர்பான் அசிங்கமாக இல்லையா? இப்படியா வாங்குவிங்க? கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா? என்று திட்டியுள்ளார்.
இதற்கு பலரும் விமர்சனம் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இர்பான், “முன்னேற்பாடுகள் எதுவும் இன்றி மனைவியோடு காரில் சென்று உதவி செய்ததால் சூழலை கையாள தெரியவில்லை. அதில் திணறி சில விஷயங்களை செய்து விட்டேன். அதற்காக மனம் வருந்துகிறேன். கஷ்டப்படுகிறவர்கள் மேல் அக்கறை இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். அப்படி இல்லை. நானும் அங்கிருந்து வந்தவர் தான்” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.