மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும் அவருடைய கணவரின் சகோதரிக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த பெண்ணை நாத்தனார் கையில் கடித்து வைத்து விட்டார். அதாவது இருவருக்குள்ளும் திடீரென தகராறு முற்றிய நிலையில் கோபத்தில் தன் அண்ணியை கைகளில் கடித்துவிட்டார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்த நிலையில் காயம் விளைவிக்கக் கூடிய பயங்கர ஆயுதத்தால் தாக்குதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அந்த எஃப்ஐஆர்-ஐ ரத்து செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது மனித பற்களை பயங்கரமான ஆயுதங்களாக கருத முடியாது என்பதால் பயங்கர ஆயுதத்தால் ஏற்பட்ட காயம் என்ற எஃப்ஐஆர் பதிவை ரத்து செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. மேலும் மருத்துவ சான்றிதழ்களில் பற்கள் தடம் பதிய பட்டதாக கூறப்பட்டாலும் லேசான காயம் தான் ஏற்பட்டுள்ளது. மேலும் கொஞ்சம் நிரூபிக்கப்படாத போது அவரை குற்றம் சாட்டப்பட்டவராக சித்தரிப்பது கண்டனத்திற்குரியது என்று நீதிபதிகள் கூறினார்.