
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தொழில் செய்து வருகிறார்கள். ஒரு சாதாரண தலைமுடியை வைத்துக் கூட தொழில் தொடங்கி அதிக அளவு லாபம் சம்பாதிக்கலாம். அதாவது நீங்கள் கடைக்கு சென்று முடி வெட்டும்போது முடி திருத்தும் நபர் உங்களிடமிருந்து முடி வெட்டுவதற்கு பணம் பெற்றுக் கொள்வார். அதன் பிறகு உங்கள் தலையில் இருந்து வெட்டப்பட்ட முடி கழிவாக கருதப்படும். அதாவது நீங்கள் கழிவாக கருதப்படும் முடியை வாங்கி அதை திருத்தி ஹேர் பிசினஸ் செய்யலாம். ஹேர் பிசினஸ் என்பது மனித முடியிலிருந்து விக், மீசை, போலி முடி மற்றும் புருவம் தாடி போன்றவற்றை தயாரிக்கிறார்கள்.
அதன் பிறகு இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மனித முடி கழிவுகள் உரங்களாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர ஒப்பனை துரிகைகள், மெத்தைகள், தளவாடங்கள் மற்றும் பொம்மைகள் போன்றவைகளும் மனித கழிவு முடியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் காரணமாக வேஸ்ட் ஹேர் பிசினஸ் மூலமாக குறைந்தபட்சம் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். மேலும் சரியான திட்டமிடலும் செயல்முறையும் இருந்தால் கண்டிப்பாக மனித கழிவு முடியில் இருந்து கூட நல்ல வருமானம் வரும் வரையில் சம்பாதிக்க முடியும்.